இடர்காலத்தில் துன்பப்படும் உறவுகளுக்கு தொடர் நிவாரணப்பணியை கல்வி கனைக்சன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.-மன்னார்

உலகெங்கும் வேகமாக பரவி உயிர்களை காவுகொள்ளும் கொரோனா என்கின்ற கொடிய நோய்த்தாக்கத்தின் காரணமாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் அவசர கால நிலமையில் தமிழர் தேசத்தில் மிகவும் பாதிப்புற்று இருக்கும் எம்மவர்களுக்கு பல புலம்பெயர் உறவுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக எம் தேசத்தில் பல உதவித்திட்டங்களை செயற்படுத்தி நடைமுறைப்படுத்தியும் வரும் கல்வி கனைக்சன்-கனடா நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலமையினால் இடர்படும் முன்னாள் போராளிகளின் தேவை அறிந்து அவர்களின் அன்றாட உணவுத்தேவையை பூர்திசெய்யும் வகையில் உலர் உணவு பொருட்களை வழங்கி வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்க்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 150 முன்னாள் போராளிகளுக்கும் உலருணவு பொருட்கள் 18.04.2020 வழங்கிவைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்தும் கட்டம் கட்டமாக கல்வி கனைக்சன் எமது முன்னாள் போராளிகளுக்கு உதவ முன்வந்துள்ளது.உதவிகளை பெற்றுக்கொண்ட முன்னாள் போராளிகள் கல்வி கனைக்சனுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.இதற்கான ஒழுங்கமைப்புக்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வழங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.