தீவகத்துக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி! – க.நாவலன்

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞலத்தின் மாணப் பெரிது!

அதாவது தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப்பெரியதாகும்.

அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து எம் மக்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல பலவழிகளிலும் இருந்து நிவாரண பொதிகளை வழங்கி அவர்களின் பசிதீர்த்த அனைத்து உள்ளங்களுகும் எம் மண்ணின் சார்பாக மிக்கநன்றிகள்.

#புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் மூலம் எமது கிராமத்தில் வசிக்கும் அனைவருக்குமான நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டது. தலைவர் திரு அபிராஜ், செயலாளர் திரு சதீஷ் மற்றும் திறம்பட செயற்பட்ட நிர்வாக உறுப்பினர்கள் , புங்குடுதீவு பங்குத்தந்தை அவர்களுக்கும். நிதிப்பங்களிப்பை வழங்கிய பிரான்ஸ் சதாசிவம் வைகுந்தராசன் ( ராசா ) தர்மலிங்கம் பாஸ்கரன் ( பாபு )

#புங்குடுதீவு நலன்புரி சங்கத்தினரின் குழந்தைகளுக்கான சத்துணவு + சுகாதார பாதுகாப்பு சம்பந்தமான பொதி

#புங்குடுதீவு கனடா பழைய மாணவர் சங்கம்
#புங்குடுதீவு சர்வோதயம் ( மனவளக்கலை மன்றம் )
#மனோன்மணி ( பேய்ச்சியம்மன் ) அன்னதான சபை
#புங்குடுதீவு தென்கந்திடல் வீரகத்தி விநாயகர் ஆலய நிவாரணப்பொதி
# பட்டயத்து அம்மன்கோவில் நிர்வாகம்
#புங்குடுதீவு சவேரியார் கோவில் நிர்வாகம்

# ஊரதீவு பனாவிடை சிவன் கோவில் நிர்வாக பங்களிப்பில் நிவாரணப்பொதிகள்

# லண்டனில் வசிக்கும் சட்டதரணி திரு நேமிநாதன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் பாரதி சனசமூக நிலையம்

#தமிழ் அரசுக்கட் சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா ஐயா, சரவணபவன் ஐயா அவர்கள் கருணாகரன்குணாளன், நாவலன் ஊடாக மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொதிவழங்கியமை.

# அர்யுன் அவர்களின் ஊடாக சுவிஸ் தாஸ் நிதி பங்களிப்பில் நிவாரணப்பொதிகள்

# tamil CNN இயக்குனர் கலாநிதி அகிலன் அவர்களின் நிவாரணப்பொதி கருணாகரன் குணாளன் ஊடாக…
# புங்குடுதீவில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் நலன்விரும்பிகள் உதவியில் நிவாரணப்பொதிகள் வழங்கியமை .

# புங்குடுதீவு இராஜேஸ்வரி பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணப்பொதி நிதியுதவி சுவிஸ் திரு காசிப்பிள்ளை கதிர்காமநாதன் அவர்கள்

# வேலணை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் புங்குடுதீவை சேர்ந்த மாணவர்களுக்கான நிவாரண பொதி.

# மற்றும் பெயர் குறிப்பிட தவறியவர்களின் நிவாரண உதவித்திட்டங்கள் .

# வேலணை பிரதேச சபையின் இலவச குடிநீர் சேவை பிரதேச சபை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பங்களிப்பில் தொடர்சியாக வழங்கியமை.

# பிரதேச செயலர் ,கிராமசேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிறைவான பங்களிப்பு

# மருத்துவர்கள் , சுகாதார அதிகாரிகள் , சுகாதார ஊழியர்களின் பங்களிப்பு.

# பாதுகாப்பு காவல்துறையினர் , கடற்படையினர் , இராணுவத்தினர் பூரண பங்களிப்பு .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.