க.பொ.த உயர்தரப் பரீட்சை – ஆணையாளரிடம் முக்கிய கோரிக்கை!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்துவதாயின், அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இரண்டு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 3 மாதங்கள் கல்வி நடவடிக்கைகள்’ முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாலும், தற்போது கொரோனா வைரஸ் பரவலாலும் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக, குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை