கொழும்பில் 1,010 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள 242 குடும்பங்களைச் சேர்ந்த 1,010 பேர் இராணுவ தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) பதிவாகிய 34 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கொழும்பு 12 இல் உள்ள பண்டாரநாயக்க மாவத்தையிலேயே அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி, அப்பகுதியில் உள்ள 242 குடும்பங்களைச் சேர்ந்த 1,010 பேர் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அந்தவகையில் அவர்கள் இலங்கை இராணுவத்தால் கண்காணிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.