முல்லைத்தீவில் நீர்த் தொட்டியில் தவறிவீழ்ந்த சிறுமி உயிரிழப்பு!

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லாவிப் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

மல்லாவி, வளநகர் மேற்கு 5ஆம் யுனிட் பகுதியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இராகுலன் துசானி என்ற 3 வயது சிறுமியே வீட்டில் உள்ள நீர்த் தொட்டியில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற மல்லாவி பொலிஸார் விசாரணை மேற்கொண்டதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மரண விசாரணை அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்