முன்னாள் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.சௌந்தரராஜன் தாம் பிரதேச சபையினால் பெற்றுக்கொண்ட சம்பளத்தை மீள வழங்கியுள்ளார்…

திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் வறுமையில் வாழும் மக்களுக்கு உதவும் நோக்கில் முன்னாள் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.சௌந்தரராஜன் தாம் பிரதேச சபையினால் பெற்றுக்கொண்ட சம்பளத்தை மீள வழங்கியுள்ளார்.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். எம். ஏ. அறூஸிடம் ஒரு வருடம் பெற்றுக்கொண்ட தமது பணம் இன்று (21) அவரது சகோதரரான எம். சிவஞான மூர்த்தியினால் கையளிக்கப்பட்டது.

மூதூர் பிரதேச சபையில் 1994 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றியபோது இவர் பெற்றுக்கொண்ட ஒரு வருட பணத்தையே கொரோனா தொற்று காரணமாக மூதூர் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இப்பணம் வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

பாட்டாளிபுரம் வீரமாநகர், இலக்கந்தை, மீனாகேணி மற்றும் நல்லூர் ஆகிய கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் இப்பணம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது என மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். எம். ஏ. அறூஸ் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.