உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் அரசு! – ரிஷாத் வலியுறுத்து

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாசிக்காக அப்பாவி நபர்களைக் குற்றவாளியாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது ருவிட்டர் வலைத்தளத்திலேயே ரிஷாத் பதியுதீன் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அத்துடன் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் தான் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சமூகத்திலிருந்த வந்தவனான தான், பயங்கரவாதத் தாக்குதலால் படும் வேதனையை நன்கு அறிவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்