ஊரடங்குச் சட்டத்தை மீறிய   34 ஆயிரத்து 956 பேர் கைது! – 8 ஆயிரத்து 948 வாகனங்களும் பறிமுதல்

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 34 ஆயிரத்து 956 பேர் பொலிஸாரினால் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு,  8 ஆயிரத்து 948 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (21) நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணித்தியாலம் வரையான காலப்பகுதியினுள் மட்டும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 131 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, 34 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.