நாளை அவசரமாகக் கூடுகிறது அரசமைப்புப் பேரவை!!
அரசமைப்புப் பேரவை எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (23) அவசரமாகக் கூடுகின்றது.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என நாடாளுமன்ற செயலாளர் அறிக்கையூடாக இன்று (22) அறிவித்துள்ளார்.
இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை