ஓட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில்  பயணிகள் இருவர் மட்டுமே பயணிக்கலாம் – பதில் பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு

வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்கள் மற்றும் ஓட்டோக்களில் சாரதியுடன் இரு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

இது  தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீராக்கும் வகையில் ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதுடன், பொது பயணிகள் போக்குவரத்தின் பாதுகாப்புத் தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படாத சில சந்தர்ப்பங்களும் உள்ளன. இது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது எனப்  பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.