மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 11 பேர் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுவரை 104 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்