கொரோனா அச்சுறுத்தல் – பன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் ​வைத்தியசாலைக்கு பூட்டு!

பன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் ​வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் மேற்குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளமையினைத் தொடர்ந்தே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையின் 73 ஊழியர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஏழு பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.