பொலனறுவையில் 12 கிராமங்கள் முடக்கம்…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படைச் சிப்பாய் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலனறுவை, லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் 12 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய மத்திய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார்.

இந்தக் கிராமங்களிலிருந்து யாரும் வெளியேறவோ அல்லது இந்தக் கிராமங்களுக்குள் யாரும் உட்புகவோ முடியாமல் முப்படையினரினதும் பொலிஸாரினதும் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கிராமங்களைச் சேர்ந்த சிலர் இன்றிரவு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள் எனவும், மேலும் பலர் நாளை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.

அதிக மக்களைக்கொண்ட பொலநறுவை மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பியிருந்தது. இந்தநிலையில், இந்த மாவட்டத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் இன்று தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.