புதிய பட்டதாரிகள் நியமனம் ரத்து செய்யப்படவில்லை- இடை நிறுத்தப்பட்டது உண்மை…

பட்டதாரி நியமனங்கள் என்பது ரத்து செய்யப்படவில்லை இதனை பட்டதாரிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் தொடர்பில்  தனது  கட்சி ஆதரவாளர்களுடன்  சந்திப்பில்  ஈடுபட்ட பின்னர்   அம்பாறை மாவட்டம்   கல்முனையில் அமைந்துள்ள  புதன்கிழமை(22)  ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

பட்டதாரி நியமனங்கள் என்பது ரத்து செய்யப்படவில்லை இதனை பட்டதாரிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் குறித்த பட்டதாரிகளில் மனித வாழ்வை வைரஸ் பரவாமல் இருப்பதற்கு கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்துவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் நன்மை கருதி தான் இந்த வேலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் .ஏனென்றால் மக்கள் ஒன்று கூடுவதை குறைப்பதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அரசாங்கம் கிராம சேவையாளர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள்  போன்றவர்களை பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு என்பது வழங்கப்பட்டுள்ள ஒரு விடயம் .ஆகவே நீங்கள் அச்சப்பட வேண்டாம். இந்த வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த  பின்னர் அனைவரும் மீண்டும் வேலைக்கு அழைக்கப்படுவார்கள் என குறிப்பிட்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்