மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவதற்கு தடை

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில், கல்வி, கல்விசாரா ஊழியர்களுக்காக மீள பல்கலைக்கழகங்களை திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அறிவிப்புக்களுக்கு அமையவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இவ்வாறு தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இணையங்கள் ஊடாக மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடர முடியுமெனவும் இதற்கான சுற்றரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்குள் கல்வி, கல்வி சாரா ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பான விசேட சுற்றரிக்கை ஒன்று விரைவில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரானா தொற்றுக் காரணமாக அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து மூடப்படுமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.