334 பேர் அடையாளம் 105 பேர் குணமடைவு 222 பேர் சிகிச்சையில் – காத்தான்குடி வைத்தியசாலையில் 53 கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 இலிருந்து 334 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் இதுவரை 105 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 222 பேர் 5 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளாகியவர்களில் 93 பேர் கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலும், 21 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும், 37 பேர் வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையிலும், 18 பேர் சிலாபம் – இரணவில வைத்தியசாலையிலும், 53 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பு – புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திலும், அம்பாறை – ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களே காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 173 பேர் 29 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.