ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்குகின்றது லவ்லி கிறீம் ஹவுஸ்!

லவ்லி கிறீம் ஹவுஸ் சாவகச்சேரி உரிமையாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில், தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களைப் பராமரிப்பவர்கள், யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்ற வறுமைநிலையில் உள்ள, ஒருவேளை உணவுக்காக அந்தரிப்பவர்களுக்கு சாவகச்சேரி லவ்லி கிறீம் ஹவுஸ் ஊடாக மதியபோசனம் வழங்க ஏற்பாடாகியுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் தனிமையில் தவிப்பவர்களுக்கும் 0213143384 என்ற தொலைபேசி ஊடாக அறியத் தந்தால் லவ்லி கிறீம் ஹவுஸ் ஸ்தாபனத்தினர் அவர்கள் இடம் நாடி உணவுகளை வழங்குவர் என்றும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்றோர் தமது பிரதேச கிராமசேவை உத்தியோகத்தரின் சிபாரிசின் ஊடாக அறியத்தர முடியும்.

இதேவேளை, கொரோனா காலத்தில் சாதாரண நேரத்திலும், ஊரடங்கு நேரத்திலும் உணவுகளைத் தயாரித்து கொண்டு சென்று வழங்குவதற்கு சுகாதாரத் துறையினர், பாதுகாப்பு தரப்பினர் என அனைவரினதும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களுக்கு உதவுவதற்கு எம்மோடு இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சமூக அமைப்புகள், பொது அமைப்புக்கள் கருணை உள்ளங் கொண்ட அன்பர்கள் ஆகியோர்   Viber ஊடாக 0778630268 என்ற இலக்கத்துடனும், அல்லது 0213143384 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் தொடர்புகொண்டு தம்மை இணைத்துக்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்