68 ஆக அதிகரித்தது கொரோனா; நேற்று மட்டும் 38 பேர் அடையாளம்

* ஒரே நாளில் அதிக நோயாளர்கள் பதிவு
* 7 நாட்களில் 130 பேருக்குத் தொற்று
* 107 பேர் குணமடைவு
* 254 பேர் சிகிச்சையில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 38 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 இலிருந்து 368 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு இன்றிரவு அறிவித்துள்ளது.

இம்மாதம் 20ஆம் திகதி ஒரே நாளில் 33 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அதன்பின்னர் நேற்றே ஒரே நாளில் அதிக தொற்றாளர்களாக 38 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 17ஆம் திகதி முதல் நேற்று 23ஆம் திகதி வரையான 7 நாட்களுக்குள் 130 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் 68 பேர் கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்களாவர்.

தொற்றுக்குள்ளாக்கியவர்களில் மேலும் 2 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரை 107 பேர் குணமடைந்துள்ளனர். அத்துடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய 254 பேரும் 5 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 173 பேர் 29 வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்