நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதா? நீதித்துறைதான் முடிவு எடுக்க வேண்டும் – சபாநாயகர் கரு அதிரடி அறிவிப்பு…

“பொதுத்தேர்தல் ஜூன் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் மீளக்கூட்டுவதா? இல்லையா? என்பதை நீதித்துறைதான் தீர்மானிக்க வேண்டும். எனது விருப்பத்துக்கிணங்க நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது.”

– இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கொரோனா வைரஸுக்கு எதிராக முழு உலகமே ஓரணியில் நின்று போராடும்போது, இலங்கை மற்றொரு அரசமைப்பு நெருக்கடியை விரும்பவில்லை. எனவே, நான் ஒருதலைப்பட்சமாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவேன் என்ற வதந்திகள் தவறானவை. ஒரு நெருக்கடியைத் தவிர்க்க அனைத்து முயற்சிகளும் நிறைவேற்று அதிகாரத் தரப்பால் எடுக்கப்பட வேண்டும். ஒரு சர்ச்சை வருமாயின், நீதித்துறையின் முடிவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கின்றேன்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.