கொரோனா நிவாரண நிதியத்திற்கு அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தினை வழங்க இணக்கம்!

கொரோனா நிவாரண நிதியத்திற்கு அமைச்சரவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கொரோனா நிதியத்திற்கு அமைச்சரவையின் ஒரு மாத சம்பளத்தை வழங்கும் யோசனையை நேற்று(வியாழக்கிழமை) பிரதமரிடம் முன்வைத்தாகவும் அதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் விநியோகிக்கும் முனையத்தின் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளமான 142 இலட்ச ரூபாயினை பிரதமரிடம் கையளித்த போதே இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.