கொரோனாவின் தாக்கத்தையடுத்து வெலிசறைக் கடற்படைச் சிப்பாய்களின் 4 ஆயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தல்.

இலங்கையின் பிரதான கடற்படை முகாம்களில் ஒன்றான வெலிசறைக் கடற்படை முகாமில் கடமையாற்றும் 30 சிப்பாய்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த முகாமைச் சேர்ந்த 4 ஆயிரம் சிப்பாய்களும் அவர்களின் குடும்பத்தினரும் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் வெலிசறை கடற்படை முகாமுக்குள் இருக்கும் 150 விடுதிகளில் உள்ளோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, கடற்படைச் சிப்பாய்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறித்து யாரும் வீண் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று கடற்படையின் ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்