நவீன தொழிநுற்பத்தின் உதவியுடன் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மட்டக்களப்பு வலயக் கல்வி திணைக்களம்.

கொரொனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக நவீன தொழிநுற்பத்தின் உதவியுடன் நேரலை (Online) ஊடான கற்பித்தலை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையானது மேற்கொள்ளவுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இது தொடர்பாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பாக மாநகர முதல்வருக்கு தெளிவுறுத்தும் வகையிலும், குறித்த கற்பித்தல் முறைமைகள் தொடர்பில்  பொது மக்களுக்கு அறிவுறுத்தும் செயற்பாடுகளில் மாநகர சபையின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலுமாக ஒழுங்கு செய்யப்பட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையில் இன்று (24) இடம்பெற்றது.இதன்படி மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி செயற்பாடுகளை தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் முன்னெடுப்பதற்காக கல்வி திணைக்களத்தினால்  நவீன தொழில்நுற்பத்தின் உதவியுடன் நேரலை (Online) ஊடான கற்பித்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனை மேலும் வினைத்திரனுடனும் , சகல வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கம் வகையிலும் விசேடமாக இந்த வருடம் 2020ல் தரம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கும், கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் அதிபர்கள் கல்வி அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் நிகழ்நிலை பரீட்சைகள் ( Online Exam ) , சமூக ஊடகங்கள் ஊடாக வீடியோ கற்பித்தல் செயற்பாடுகள் , Whatsapp குழுக்களூடாக அலகு ரீதியான செயலட்டைகள் பரீட்சை வினாத்தாள்கள் போன்றவற்றை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கபடவுள்ளன.

அத்துடன் இணைய வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு அச்சிடப்பட்ட செயலட்டைகளையும் மாதிரி வினாத்தாள்களையும் அவற்றுக்கான விடைகளையும் பாடசாலைகளுகளுக்கு ஊடாக வழங்கும் செயற்பாடுகளும்  இடம்பெறவுள்ளன.

இதற்கமைய பிள்ளைகள் வீடுகளிலேயே முழுமையாக தங்கி வாழும் இன்றைய கால கட்டத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கான ஆசிரியர்களாக வழிகாட்டிகளாக மாறி சற்று அதிகமான கரிசனையுடன் பங்களிப்பு செய்ய வேண்டிடு எனவும், சுய கற்றல், சுய ஒழுக்கம், இலக்கை ஆதாரமாகக் கொண்ட நாளாந்த செயல்கள், வீட்டுத்தோட்டம் அமைத்தல், ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடல் என வாழ்க்கைத்திறன்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும் இச்செயற்பாடுகளுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என எல்லோரும் ஒன்றிணைந்து கரம் கோர்த்து உழைக்க முன்வர வேண்டும் எனவும் வலயக் கல்வி பணிப்பாளர் இதன்போது வேண்டுகோள்விடுத்தார்.

மேற்படிக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திகுமார், பிரதி கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.