416 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

* மேலும் 48 பேர் இன்று அடையாளம்
* 107 பேர் குணமடைவு
* 259 பேர் சிகிச்சையில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை416 ஆக அதிகரித்துள்ளது.

இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 11 பேரும் மட்டக்களப்பு – புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பண்டாரநாயக்க மாவத்தையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.

வெலிசர கடற்படை முகாம் கடற்படைச் சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 107 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 265 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 183 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்