காணாமல் போயிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு!

காணாமல் போயிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் (வயது 37) இன்று(சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் நேற்றிரவு மீட்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன்,  உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை தொண்டமனாறு கடற்கரையில் அவர் சடலமாக கண்டுக்கப்பட்டுள்ளார். சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்