தேர்தல் திகதியை மாற்றவே முடியாது! – மஹிந்த தேசப்பிரியவின் அறிவிப்புக்கு ஹூல் எதிர்ப்பு

“ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களும் இணைந்துதான் எடுத்தோம். இந்தத் திகதியில் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளுடனான சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய,  “கொரோனா நிலைமையைப் பொறுத்தே ஜூன் 20ஆம் திகதி தேர்தல் இடம்பெறும். ஜூன் 20ஆம் திகதி தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்பதை மே முதல் வாரத்திலேயே தீர்மானிக்க முடியும்” என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் கேட்டபோதே ரட்ணஜீவன் ஹூல் மேற்கண்டவாறு கூறினார்.

“தேர்தல் நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் இணைந்துதான் ஜூன் 20ஆம் திகதியைத் தீர்மானித்தோம். தேர்தல் திகதியை தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தனித்து மாற்ற முடியாது. ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூன்று பேரும் இணைந்தே அதில் மாற்றங்களைச் செய்ய முடியும்” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் குறிப்பிட்டார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்