நிவாரண நடவடிக்கைகளில் வேட்பாளர்களுடன் இணைந்து அரசஅதிகாரிகள் செயலாற்றத் தடை! – தேர்தல்கள் ஆணைக்குழு திடீர் அறிவிப்பு…

அரச நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் நாடாளுமன்ற வேட்பாளர்கள் எவருடனும் இணைந்து செயற்பட வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலில், தேர்தல் காலப் பகுதிக்குள் மக்களுக்கு அரசால் பகிர்ந்தளிக்கப்படுகின்ற நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், நியதிச் சட்ட சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் அலுவலர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளரோடும் இணைந்து செயற்படுவது கட்சிகள் அல்லது குழுக்கள் அல்லது வேட்பாளர்கள் ஊக்குவிப்பைத் தூண்டுவதால் அதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்