மன்னாரில் தனியார் வைத்தியசாலையொன்றில் பாரிய தீவிபத்து

மன்னாரில் தனியார் வைத்தியசாலையொன்றில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு பாரிய தீவிபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இதனால், வைத்தியசாலையின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதி, மன்னார் பொது வைத்தியசாலைக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றே எரிந்து நாசமாகியுள்ளது.

நேற்று இரவு குறித்த தனியார் வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கு காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தீயணைப்பு வாகன ஏற்பாடு இல்லாமையினால் தீயை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள், மருத்துவ கருவிகள் மருந்துகள் உட்பட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்து ஏற்பட்டவுடன் உடனடியக செயற்பட்ட மன்னார் பொலிஸார், மன்னார் நகர சபையினர், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் பொது மக்களின் உதவியுடன் குறித்த பகுதியில் உள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.