பக்கெட்டுகளில் அடைத்து கசிப்பு விற்பனை – இரண்டு பேர் கைது!
கசிப்பினை பக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேரை கோப்பாய் பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமாக துவிச்சக்கரவண்டியில் சென்ற இருவரை சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த இரு சந்தேக நபர்களிடமிருந்து பக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட கசிப்பினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து சிறிய சிறிய பக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் 6 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை