நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் 31 இந்தியப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி விநியோக நடவடிக்கையில் ஈடுபடும் 31 இந்தியப் பிரஜைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

உதவி சுகாதார வைத்திய அதிகாரி தமிஸ்ரி மதுலால் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

உடல் வெப்ப நிலை உள்ளிட்ட மேலதிக பரிசோதனைகளின் பின்னரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு கொண்டுவரப்படுகின்ற நிலக்கரிகளை, உரிய பகுதிக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் 106 இந்தியப் பிரஜைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.