கடற்படையினரின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து

அனைத்து கடற்படையினரதும் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடற்படடைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பும் வரை விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக  அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அனைத்து கடற்படை வீரர்களும் தமது முகாமிலிருந்து வௌியேறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள படையினருடன் தொடர்புகளை பேணியவர்கள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படடைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா கூறியுள்ளார்.

குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்