நாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை..!

ஜா-எலவில் உள்ள சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு நாய்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்றும் குறித்த நாய் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜா-எலவில் ஒரு பூனைக்கும் இரண்டு நாய்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியானது. இது தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து தான் தனிப்பட்ட முறையில் அங்கு சென்று பார்வையிட்டதாக ஜா-எல நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அதிகாரி அனுர அபேரத்ன கூறினார்.

ஒரு நாய் சளி அறிகுறிகளைக் கொண்டிருந்தது, மற்றொன்று இருமல் மற்றும் சுவாசக் கஷ்டத்தால் பாதிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், ஒரு கால்நடை மருத்துவரின் சிகிச்சையைத் தொடர்ந்து, நாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அத்தோடு விலங்குகளினால் மனிதனுக்கு வைரஸ் பரவுவது சாத்தியமில்லை என்பதை கால்நடை மருத்துவர் உறுதிப்படுத்தியிருந்தார் இருப்பினும் இதுவரை இது குறித்த அறிக்கைகள் வெளியாகவில்லை என்றும் அபேவர்தன தெரிவித்தார்.

ஒரு நாய் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளது என்றும் அதே நேரத்தில் மற்ற நாய்க்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.