G.C.E(O/L) பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு தினங்களில் வெளியாகின்றது!

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பெறுபேறுகளை இணையதளத்தின் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

இதற்கமைய பெறுபேற்று பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கு வலய மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு கடவுச்சொல் மற்றும் பயனருக்கான பெயர்கள் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், www.doenets.lk என்ற இணையத்தள முகவரிக்கு சென்று தமது பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.