யாழில் மேலும் 27 பேருக்கு பரிசோதனை முன்னெடுப்பு: இதுவரை 580 பேரிடம் பரிசோதனை!

யாழ்ப்பாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கு தொற்று இல்லையென கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 27 பேருக்கும் நேற்று (சனிக்கிழமை) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாக யாழ்.போதானா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 பேர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு 10 பேர், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 5 பேர், கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 3 பேர் என மொத்தமாக 27 பேருக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலையில் இதுவரை 129 பேர் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது.

அத்துடன், போதனா வைத்தியசாலைக்கு வெளியே இதுவரை அபாய நிலைக்கு உள்ளான 451 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களிர் 20 பேருக்கு (முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தில் தொற்று கண்டறியப்பட்ட 4 பேர் உட்பட) தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.