வெலிசறை முகாமில் பணியாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை வீரருக்கு தொற்று இல்லை!

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய வவுனியாவைச் சேர்ந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீரரக்கு நேற்று (சனிக்கிழமை) கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 60இற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்றுநோய் இருப்பது கடந்த இரு நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த முகாமில் பணியாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை வீரர் அண்மையில் வவுனியா மகாகச்சகொடி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு விடுமுறையில் வந்துள்ளார்.

இதையடுத்து, குறித்த உத்தியோகத்தர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் இரத்தமாதிரிகள் நேற்று பெறப்பட்டிருந்தது.

குறித்த இரத்த மாதிரிகள் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மேற்கொள்ளபட்ட நிலையில் அவருக்கு அதற்கான அறிகுறிகள் இல்லை என முடிவு வந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.