தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல்

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தபால் அலுவலகங்களை மீள திறப்பது தொடர்பான தகவல்கள் குறித்து விசேட செயலணியை தெளிவுப்படுத்தியுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஏனைய இடர் வலயங்களில் மருந்து விநியோகிக்கும் பணியில் தபால் அலுவலகங்கள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்