பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குவைத் தூதுவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய மே மாதம் 30ஆம் திகதி வரை குறித்த காலத்தினை நீடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த இலங்கை பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு குவைத் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை பணியாளர்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகளையும் குவைத்துக்கான இலங்கை தூதரகம் ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவடையவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்