கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் இலங்கை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவின் கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா விமான சேவையின் விசேட விமானத்தில் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர் . இவ்வாறு திரும்பியவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்களுடன் UL144 என்ற விமானம் நேற்று இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்