யாழ். பல்கலையின் வெளிமாவட்ட மாணவர்களின் செலவுகளை ஏற்றார் தியாகி அறக்கொடை ஸ்தாபகர்

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன்.

கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் காரணமாக சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது இடங்களுக்குச் செல்வதற்கான செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார்.

அதாவது, மட்டக்களப்பு மற்றும் மலையக மாணவர்கள் ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்களின் இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர். அப்போது அவர்களுக்கான உணவுத் தேவையை நிறைவு செய்தார். மேலும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு தங்கள் இடங்களுக்குச் செல்வதற்கான அனுமதி கிடைத்ததும் பயணத்துக்கான செலவையும் இவரே ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா நிதியத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியது மட்டுமல்லாது கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்கு இதுவரை ஒரு கோடி ரூபாவையும் வழங்கியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.