தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை – செஹான் சேமசிங்க

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காலத்தில் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் நாட்டில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டுவருவதற்கும் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது என்றார்.

எனவே தேர்தல் வருவதற்கு முன்னர் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் இதன்போது குறிப்பிட்டார். அத்தோடு தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான அனைத்து முடிவுகளும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன என்றும் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்