மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அட்டன் நகரம் முழுவதும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

(க.கிஷாந்தன்)

ஊரடங்கு உத்தரவு  நாளை (27.04.2020) காலை நீக்கப்பட்ட பின்னர் நகருக்கு வரும் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அட்டன் நகரம் முழுவதும் இன்று (26.04.2020) தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

அட்டன் – டிக்கோயா நகரசபை ஊடாகவே இதற்கான செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி பஸ் தரிப்பிடம், பொதுசந்தை கட்டடத்தொகுதி, மக்கள் அதிகளவு கூடும் இடங்கள், வீதிகளிலுள்ள பாதுகாப்பு வேலி உட்பட பல இடங்களில் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், இரசாயண திரவம் தெளிக்கப்பட்டு வீதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன.

அதேவேளை, ஊடரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் அட்டன் நகருக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்