கொரனா சந்தேகத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி..

கொரனா  தொற்று சந்தேகத்தில் வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரனா வைரஸ் தொற்றுக்குரிய நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் வவுனியா சிறைச்சாலையில் கடமை புரிந்த குறித்த நபரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த நபரை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதுடன், கொரனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்காக இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரத்த மாதிரி பெறுபேறு வந்த பின்னரே கொரனா தொற்று உள்ளதா என்பதை தெரிவிக்க முடியும் என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த நபர் நோய் தொற்று இருந்த பகுதியில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.