யாழில் வீதியால் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழப்பு!

வீதியால் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.

நாவலர் வீதி ஆனைப்பந்தி சந்தியில் சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அம்புலன்ஸ்க்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகை தந்த போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஓட்டுமடத்தை சேர்ந்த வாமதேவன் என்று அறியக்கிடக்கின்றது.

யாழில் வீதியால் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழப்பு!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.