கொரானா கெடுபிடியிலும் புலிக்கொடி ஏந்தி….!

கோவிற்-19 என்ற உயிர் கொல்லி நோய் பரம்பலுக்கு உயிர் ஆபத்து மத்தியில் மக்களுக்கு ஊழியம்(சேவை) செய்யும் இன்றியமையாத ஊழிய முன்நிலை ஊழியர்கள் நாடுகடந்த தமிழீழ அரசால் பெருமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஈடு இணையற்ற ஊழியத்தை பெருமைப் படுத்துமுகமாக தமிழ் மக்கள் சார்பில் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் அன்பளிப்பு செய்து பெருமைப் படுத்தியது நாடுகடந்த தமிழீழ அரசு.

முதற்கட்டமாக நேற்று நடைபெற்ற மார்க்கம் ஸ்ரோவில் மருத்துவமனை ஊழியர்களுக்கு உணவுப்பொருட்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கனடாப் பொறுப்பாளர் திரு.ரெஜி சங்கர் சபாரத்தினம் முன்னிலை வகித்தார். நாடுகடந்த தமிழீழ அரசின் உதவி செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் மகாயம் அவர்கள் உடனிருந்தார். கனடா நாட்டுக் கொடி மன்றும் தமிழீழ தேசியக் கொடியை தொண்டர்கள் ஏந்தி நிற்க மேற்படி நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. எந்நிலை வரினும் புலிக் கொடியைக் கைவிடாத அவர்களின் மாண்பை தமிழ்மக்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

குறிப்பு:
அத்திய அவசிய என்ற சொல் வடமொழி அதற்கு நிகரான தமிழ்ச்சொல் – இன்றியமையாத அல்லது கட்டயாய
சேவை என்ற சொல்லும் வடமொழி அதற்கு நிகரான தமிழ்ச் சொல் ஊழியம்.

செய்தி: முழக்கம் செய்தி ஏடு கனடா

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்