அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவோம் – எழுத்துமூலம் உறுதியளித்த எதிர்க்கட்சிகள்!

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவளிக்கும் என்பதை உறுதிப்படுத்தும் முகமாக எதிர்க்கட்சிகள் கூட்டு அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பொது சுகாதார நெருக்கடியின் பின்னணியில் மற்றும் அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கையில் பல சவால்கள் உருவாகியுள்ளன என 10 விடயங்களை சுட்டிக்காட்டி இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

இந்த தொற்றுநோயை கட்டுபடுத்த முடியும் என சில நாட்களுக்கு முன்னர் நம்பிக்கை கொண்டிருந்தபோதும் தற்போது அந்த நம்பிக்கை துரதிஷ்டவசமாக தளர்ந்து செல்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இந்தநிலையை அடுத்த சில வாரங்களுக்குள் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசால் சமூக பொருளாதார ரீதியாக நாடு பல இடர்களை சந்திக்க நேரிடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுஃப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கல் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.