வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் நாளை பூட்டப்பட்டிருக்கும் என அறிவிப்பு

வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.

வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த கடற்படை வீரர் வவுனியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ளார். எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் தொற்று நீக்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வவுனியாவில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், மற்றும் சந்தைகள் என்பன நாளைய தினம் பூட்டபட்டிருப்பதுடன் பொதுப்போக்குவரத்தும் இடம்பெறாது என் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.