கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு மைக்ரோ கார் நிறுவனம் பேருந்து அன்பளிப்பு

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக மைக்ரோ கார் லிமிடற் நிறுவனம் 90லட்சம் பெறுமதியான பேருந்து அன்பளிப்பு செய்துள்ளது.

பேருந்து நேற்று(திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மைக்ரோ கார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பெரேராவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடயம்  கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்