மேலும் 124 இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை..!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து விதிக்கப்பட்டுள்ள பயண தடை காரணமாக இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மேலும் 124 இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் பெங்களூருக்கு ஸ்ரீலங்கா விமான சேவையின் விசேட விமானம் ஒன்று சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்களும் கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்களும் கடந்த வாரங்களில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.