கடற்படையை ஏற்றிச்சென்ற பஸ் மரத்துடன் மோதுண்டது! – 5 சிப்பாய்கள் படுகாயம்

காலி – கொழும்பு பிரதான வீதியில் கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 5 கடற்படை சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர்.

விடுமுறையில் சென்ற கடற்படையினரை ஏற்றிக்கொண்டு கடற்படைத் தலைமையகத்துக்குக் குறித்த பஸ் நேற்றிரவு பயணித்துள்ளது. இதன்போது பஸ் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த கடற்படையினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்