தனிமைப்படுத்தல், இடைத்தங்கல் நிலையங்கள் தொடர்பில் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்!

விஜயரத்தினம் சரவணன்


தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் இடைத்தங்கல் நிலையங்களுக்கும் இடையேயான வித்தியாசங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.என்று முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.சுகந்தன் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது தொற்றுள்ளவருடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் தொற்று இருக்க அதிக வாய்ப்புள்ளவர்கள் கவனிக்கப்படுகின்றார்கள்.

இடைத்தங்கல் நிலையங்களில் விடுமுறையின் பின்னர் வருபவர்கள் ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுகிறதா என அவதானிப்பதற்காகத் தங்க வைக்கப்படுவர்.

இனிவரும் நாட்களில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் இடைத்தங்கல் அவதானிப்பு நிலையங்கள் தேவைப்படும். ஏன்? சில சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இது தேவைப்படலாம். இதற்காகப் பாடசாலைகள் மட்டுமல்ல உங்கள் பக்கத்து வீடுகளும் பாவிக்கப்படும்.

நீங்கள் எப்பொழுதும் சமூக மற்றும் பௌதீக இடைவெளிகளைப் பேணுவதுடன் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் முறையாகப் பின்பற்றினால் நோய்த்தாக்கத்தில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.