யாழ். மாநகர சபை அமர்வு: தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி வெளிநடப்பு

யாழ். மாநகர சபையின் அமர்வு மாநகர சபையின் பிரதி முதல்வர் ஈசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மாநகர சபையில் உள்ள சபை மண்டபத்தில் சமூக இடைவெளியைப் பேணி கூட்டத்தினை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமர்வு இடம்பெற்றுள்ளது.

கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது, அதிகாரம் இல்லாத குறித்த கூட்டத்தில் தாங்கள் இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி , ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

பெரும்பாலான உறுப்பினர்களின் வெளிநடப்பை அடுத்து மாநகர சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் மே மாதம் 21 திகதி இடம்பெறும் என பிரதி முதல்வர் து.ஈசன் அறிவித்ததை அடுத்து இன்றைய அமர்வு நிறைவடைந்துள்ளது.

இது தொடர்பாக அமர்வில் இருந்து வெளிநடப்புச் செய்த உறுப்பினர்கள் சிலர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இதன்போது, இந்தக் கூட்டம் முதல்வருக்குரிய அதிகாரம் வழங்கப்படாமல் கண்துடைப்புக்காகவே நடத்தப்படுகிறது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.